குன்னுார்; வெலிங்டன் ஐயப்பன் கோவிலில், மண்டல மகோற்சவ விழாவையொட்டி, பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நடந்தது. குன்னுார்– ஊட்டி சாலையில் அமைந்துள்ள வெலிங்டன் ஐயப்பன் கோவிலில், மண்டல மகோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவையொட்டி ஹரி குருசாமி தலைமையிலான ஐயப்ப பக்தர்கள் குழுவினரின் பாலாபிஷேகம் நடந்தது. அதில், பகவதி சன்னதியின் முன்பு விளக்கேற்றி, சிறப்பு வழிபாடுகளுடன் கோவிலை சுற்றி பால் குடங்கள் மற்றும் புஷ்ப ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர், ஐயப்பனுக்கு பாலாபிஷேகம், புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை ஆகியவை நடந்தது; பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரும், 26ம் தேதி காலை 6:00 மணி முதல் 10:00 மணி மற்றும் மாலை, 5:00 மணி முதல் 8:00 மணி வரை மண்டல பூஜை நடக்கிறது. ஜன., 14ம் தேதி மகரஜோதி சிறப்பு பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, வெலிங்டன் ஐயப்பன் கோவில் பொது செயலாளர் முரளிதரன் தலைமையில் ஐயப்ப பக்த குழுவினர் செய்து வருகின்றனர்.