மார்கழி சோமவாரம்; வெண்பட்டு சாற்றி சிவனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2024 01:12
கோவை; சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலில் மார்கழி மாதம் முதல் சோமவாரம் திங்கள் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் கைலாசநாதர் சன்னதியில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் வெண்பட்டு வஸ்திரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.