Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ. 64.89 ... ராமேஸ்வரம் கோவிலில் பாகுபலி மாடுடன் வந்து சாமி தரிசனம் செய்த பக்தர் ராமேஸ்வரம் கோவிலில் பாகுபலி மாடுடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னுார் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குன்னுார் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை துவக்கம்

பதிவு செய்த நாள்

26 டிச
2024
11:12

குன்னுார்; குன்னுார் ஐயப்பன் கோவிலில் நேற்று துவங்கிய மண்டல பூஜை விழாவில், திருவிளக்கு பூஜை மற்றும் படி பூஜை நடந்தது. குன்னூர் ஐயப்பன் கோவிலில், 58வது ஆண்டு மண்டல பூஜை நேற்று துவங்கியது. கோவில் ஸ்தாபகர் சாமிதாஸ் சங்கர சுவாமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில் காலை, 11:30 மணிக்கு மகளிர் குழுவினரின் திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், படி பூஜை, ராக்கால பூஜை, ஹரிவராசனம் இடம் பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். முக்கிய திருவிழா நாளான இன்று (26ம் தேதி) அதிகாலை, 5:00 மணிக்கு நிர்மால்ய தரிசனம், மகா கணபதி ஹோமம் நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள், தீர்த்த குடம், அபிஷேக பொருட்களுடன் செண்டை மேளம், சிந்து பாட்டு, சரண கோஷம் முழங்க ஊர்வலமாக ஐயப்பன் கோவிலை வந்தடைகின்றனர். தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு ஐயப்பன் கோவிலில் இருந்து, புலி வாகனத்தில், செண்டை மேளம் முழங்க ஐயப்பன் திருவீதி உலா நடக்கிறது. இதில் தையம், பூதந்திரா, தாளம் ஏந்தி, பாலக்கோம்பு ஊர்வலம் இடம்பெறுகிறது. ஏற்பாடுகளை குன்னுார் ஐயப்ப பக்த சங்கத்தினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar