கர்ம பலன்களையும் அதற்கான பலன்களையும், பூர்வ ஜன்ம புண்ணியத்தால் சில தீய விளைவுகள் நீங்குவதற்கான பரிகாரங்களைச் செய்து இந்த ஜன்மத்திலேயே நலம் பெறுவதற்கான வழிகளையும், ரிஷிகள் உள்ளுணர்வால் அறிந்து அதை பல தர்ம சாஸ்திர நூல்களில் விவரித்துள்ளனர். அவற்றை அறிந்து நலம் பெறலாம்; பலனை எதிர்பார்க்காமல் கர்மங்களைச் செய்து கர்ம விளைவுகள் நம்மைப் பற்றாமல் அடுத்த ஜன்மத்தைப் புனிதம் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளலாம்; கர்ம பலன் ரகசியத்தை விசாரத்தால் அறிந்து, இறைவனை அடிபணிந்து ஜன்ம நிவிருத்தி பெற்று முக்தியையும் அடையலாம்! எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது. இதையே கீதையில் சுருக்கமாக கண்ணன் உத்தரேத் ஆத்மனாத்மானம் (ஆத்மாவினாலேயே ஆத்மாவை உயர்த்திக் கொள்ள வேண்டும்; அதாவது உன்னை நீயே உயர்த்திக் கொள்ளலாம் ஆறாம் அத்தியாயம் ஐந்தாம் ஸ்லோகம்) என்று கூறி விட்டான்! நல்ல கருமங்களைப் பற்றில்லாமல் செய்து! நம்மை நாமே உயர்த்திக் கொள்வோம்.