பதிவு செய்த நாள்
31
டிச
2024
12:12
கார்த்திகை; முயற்சியில் வெற்றி
சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1 ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
2025 ம் ஆண்டில் கார்த்திகை 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நன்மை அதிகரிக்கும். முன்னேற்றம் உண்டாகும். நினைப்பது நடந்தேறும். செல்வாக்கு உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு முயற்சி வெற்றியாகும். தொழில் தொடங்கும் வாய்ப்பு அமையும். வேலை தேடி வந்தவர்களின் கனவு நனவாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.
சனி சஞ்சாரம்: கார்த்திகை 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் லாபாதிபதியாகவும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதியாகவும் சஞ்சரிப்பதால் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிர்பார்த்த லாபத்தை வழங்குவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். தொழில் மீதான அக்கறையை அதிகரிப்பார்.
ராகு, கேது சஞ்சாரம்: 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 25 வரை கேதுவும், அதன்பிறகு ராகுவும் எதிர்பார்ப்புகளில் ஆதாயத்தை வழங்குவார். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிர்ப்பு இல்லாமல் செய்வார். வழக்கில் வெற்றி தருவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மே 25 வரை லாப ராகு வருமானத்தை அள்ளித் தருவார். வெளிநாட்டு முயற்சிகளை வெற்றியாக்குவார். அந்நியரால் ஆதாயத்தை வழங்குவார். பொருளாதார நிலையை உயர்த்துவார். அதன்பிறகு உழைப்பு அதிகரிக்கும். வேலைப்பளு கூடும்.
குரு சஞ்சாரம்: பிப். 10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் ரிஷபத்திலேயே வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே. 11 முதல் மிதுன ராசிக்குள் பிரவேசிப்பவர், அக். 8 முதல் கடகத்தில் சஞ்சரிப்பார். இதனால் 1 ம் பாதத்தினருக்கு மே10 வரை பொருளாதாரத்தில் முன்னேற்றம், குடும்பத்தில் நிம்மதி. வழக்கில் வெற்றியை வழங்குவார். அதன்பின் திருமண வயதினருக்கு திருமணம், வீடு கட்டி குடியேறுதல், தொழிலில் ஆதாயத்தை அதிகரிப்பார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மே10 வரை பார்வைகளால் முன்னேற்றம், திருமண யோகம், குழந்தை பாக்கியம் தருவார். மே 11 முதல் உடல்நிலையில் முன்னேற்றம். வழக்கில் வெற்றி, செல்வாக்கு, அந்தஸ்து. வேலைவாய்ப்பு, பட்டம். பதவி என உங்கள் நிலையை உயர்த்துவார்.
சூரிய சஞ்சாரம்: கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு ஜன. 14 - மார்ச் 14 காலத்திலும், ஜூன். 15 - ஜூலை 16, செப்.17 - அக். 17 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு பிப். 13 - ஏப். 13 காலத்திலும், ஜூலை 17 - ஆக.16, அக்.18 - நவ. 16 காலங்களிலும், 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன், தொழில், பணியில் முன்னேற்றம் தருவார். பணப்புழக்கம் கூடும். எதிர்பார்த்த வரவு வரும். செல்வாக்கு கூடும். ஊழியர்கள் எதிர்பார்த்த மாற்றம், உயர்வை தருவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி அளிப்பார். பிரச்னைகள், போட்டிகள், வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
பொதுப்பலன்: உங்கள் நிலை உயரும். இழுபறியான வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். புதிய வாய்ப்பு தேடி வரும். அரசு வழியில் ஆதாயம், உறவினர்களால் உதவி, புதிய சொத்து சேர்க்கை. திருமண யோகம். குழந்தை பாக்கியம் கிடைக்கும். முயற்சிகள் வழியே எதிர்பார்த்த முன்னேற்றம் காண்பீர்கள்.
தொழில்: தடைபட்ட முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றமடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஆதாயம் தரும். இன்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம் கை கொடுக்கும். தொழிலில் இருந்த தேக்கம் நீங்கி. விற்பனை அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
பணியாளர்கள்: பணியாளர்கள் நிலை உயரும். பணிபுரியும் இடத்தில் மதிப்பும் ஊதியமும் அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு மாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும். என்றாலும் வேலையில் கவனமாக இருப்பதும், பிறருடைய விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மையாகும்.
பெண்கள்: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன்வரும். குழந்தைக்காக ஏங்கியவர்கள் ஏக்கம் தீரும். பொன் பொருள் சேரும். கணவரின் அன்பு கூடும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
கல்வி: படிப்பில் ஆர்வம் கூடும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை நன்மை தரும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
உடல்நிலை: நீண்டகால நோய்களும் இப்போது சரியாகும். படுக்கையில் படுத்திருந்தவர்களும் எழுந்து நடமாடுவர். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறை நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படும் அளவிற்கு உடல்நிலை முன்னேற்றமடையும்.
குடும்பம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என உங்கள் நிலை உயரும். பொன் பொருள் சேரும்.
பரிகாரம் குருபகவானை வழிபட வாழ்வு வளமாகும். நன்மை நடந்தேறும்.
ரோகிணி; நினைப்பது நிறைவேறும்
சுக்கிரன், சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2025 ம் ஆண்டில் நன்மை அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். பொன்னும் பொருளும் சேரும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் அமையும். நினைப்பது நடந்தேறும். முயற்சிகள் வெற்றியாகும். முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் வேலைகள் நடந்தேறும். வேலைத்தேடியவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சனி சஞ்சாரம்:
ஜீவனாதிபதியான சனி பகவான், ஜீவன ஸ்தானத்திலேயே ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். தொழில், உத்தியோகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு, புதிய பொறுப்பு ஏற்படும். அந்தஸ்தும், செல்வாக்கும் உயரும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.
ராகு, கேது சஞ்சாரம்: வருடத்தின் தொடக்கத்தில் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிப்பதால் மே 25 வரை, லாப ராகு வருமானத்தை அதிகரிப்பார். எதிர்பார்ப்புகளை அடைய வைப்பார். முயற்சியை வெற்றியாக்குவார். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் உயர்வையும், வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவார். மே 26 முதல் ராகு 10ல் கேந்திர பலம் பெறுவதால் தொழில், வியாபாரம் வளர்ச்சியாகும். புதிய தொழில் தொடங்கலாம்.
குரு சஞ்சாரம்: பிப்.10 வரை உங்கள் ராசிக்குள் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிப்பதாலும், தொடர்ந்து, மே 11 முதல் மிதுன ராசிக்குள் பிரவேசிப்பவர் அக். 8 முதல் கடகத்தில் சஞ்சரிக்க உள்ளதாலும், மே 10 வரை அலைச்சல் அதிகரித்தாலும் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு திருமணம். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு மழலைச்செல்வம் விரும்பியபடி புதிய வீடு கட்டி குடியேறும் யோகம். அந்தஸ்து, செல்வாக்கை வழங்குவார். உயர்கல்விக்கு வழிகாட்டுவார். மே. 11 முதல் உடல்நிலையில் முன்னேற்றம். வழக்கில் வெற்றி. பொருளாதார உயர்வு. வியாபாரத்தில் லாபம். வேலையில் எதிர்பார்த்த இடம். வேலைவாய்ப்பு. பட்டம். பதவி என உங்கள் நிலை உயரும்.
சூரிய சஞ்சாரம்:
பிப்.13 - ஏப்.13 காலத்திலும், ஜூலை 17 - ஆக.16, அக். 18 - நவ. 16 காலங்களிலும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலையில் சங்கடங்கள் தீரும். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுகத் தொல்லைகள், எதிர்ப்பு மறையும். பணப்புழக்கத்தை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். அரசு ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றத்தையும் உயர்வையும் வழங்குவார். அரசியல்வாதிகள் செல்வாக்கை உயர்த்துவார். வழக்கில் வெற்றி கிடைக்கும்.
பொதுப்பலன்: கடந்த கால சங்கடம் விலகும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு வரும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி, சலுகை கிடைக்கும். சொத்து சேரும். வீடு, வாகனம் அமையும். திருமண வயதினருக்கு திருமணம். குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தொழில்: தொழில் முன்னேற்றமடையும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாகன உற்பத்தி, ஸ்பேர் பார்ட்ஸ், இயந்திரத் தொழிற்சாலை, பால் வணிகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு, மின்சார சாதனங்கள் தயாரிப்பு, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், ஸ்டேஷனரி, சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம், விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும்.
பணியாளர்கள்: உழைப்பிற்கேற்ற மரியாதையும் உயர்வும் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றமும், கூடுதல் பொறுப்பும் ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு வேலையில் ஏற்பட்ட பிரச்னை, வழக்கு முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும்.
பெண்கள்: வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். அலுவலகப்பணியில் எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் தோன்றும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பொன் பொருள் சேரும். செல்வாக்கு அதிகரிக்கும்.
கல்வி: படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஆசிரியர்கள் வழிகாட்டுதலை ஏற்று செயல்படுவீர். மேற்படிப்பின் மீது ஆர்வம் கூடும். பொதுத்தேர்வில், போட்டித்தேர்வில் எதிர்பார்ப்பு நிறைவேறும். விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்வீர்.
உடல்நிலை: அஜீரணக்கோளாறு, அல்சர், வாயுத்தொல்லை, ஒவ்வாமை என சிரமப்பட்டவர்கள் விடுதலை காண்பர். நீண்ட கால நோயும் விலகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
குடும்பம்: குடும்பத்தில் பிரச்னைகள் விலகும். கடன்தொல்லை நீங்கும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். வீடு, வாகனம், பொன், பொருள் என உங்கள் நிலை உயரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும்.
பரிகாரம் மகாலிங்கேஸ்வரரை வழிபட்டுவர வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
மிருகசீரிடம்; அதிர்ஷ்ட காலம்
செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
2025 ம் ஆண்டில் மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நினைப்பது நடந்தேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய சொத்து சேரும். உறவுகளால் ஆதாயம் உண்டாகும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். சிலருக்கு புதிய தொழில் அமையும். வேலைக்காக முயற்சித்தோரின் கனவு நனவாகும்.
சனி சஞ்சாரம்:
மிருகசீரிடம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் ஜீவனாதிபதியாக, தொழிலில் அக்கறையை அதிகரிப்பார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிர்பார்த்த லாபத்தை வழங்குவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளுவை ஏற்படுத்துவார். அதற்கேற்ற உயர்வையும் வழங்குவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். வருவாயை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். நோய்களை அகற்றுவார். நினைத்ததை நடத்தி வைப்பார்.
ராகு, கேது சஞ்சாரம்: 1,2 ம் பாதங்களில பிறந்தவர்களுக்கு மே 25 வரை லாப ராகுவால் வருமானம் உயரும். தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். நட்புகளால் ஆதாயம் ஏற்படும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். நெருக்கடி நீங்கும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே26 முதல் மூன்றாமிட கேதுவால் முயற்சிகள் வெற்றியாகும். நினைப்பது நடந்தேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நினைப்பதை சாதிக்க முடியும்.
குரு சஞ்சாரம்: பிப். 10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் ரிஷபத்திலேயே வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே. 11 முதல் மிதுன ராசிக்குள் பிரவேசிப்பவர் அக். 8 முதல் கடகத்தில் சஞ்சரிப்பார். இதனால் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 10 வரை ஜென்ம குருவாக, அலைச்சல் ஏற்படுத்தினாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்து சேரும். மே.11 முதல் தன குருவாக, வருமானத்தை அதிகரிப்பார். எடுத்த வேலைகளை முடித்து வைப்பார். தொழிலில் ஆதாயத்தை ஏற்படுத்துவார். போட்டியாளர்களை பலமிழக்க வைப்பார். வழக்கில் வெற்றியை வழங்குவார். வேலைவாய்ப்பை உண்டாக்குவார்.
3,4 ம் பாதத்தினருக்கு மே 10 வரை விரய குருவாக, செலவை அதிகரிப்பார். உழைப்பிற்கேற்ற வருமானத்தை வழங்குவார். அந்தஸ்தையும் செல்வாக்கையும் உயர்த்துவார். நோய்நொடிகளில் இருந்து விடுவிப்பார். மே 11 முதல் ஜென்ம குருவாக, பணியாளர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வை வழங்குவார். நீண்ட கால கனவை நனவாக்குவார். புதிய வீடு கட்டி குடியேற வைப்பார். திருமணம், குழந்தை பாக்கியம், பட்டம். பதவி என முன்னேற்றுவார்.
சூரிய சஞ்சாரம்: மிருசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, பிப். 13 - ஏப். 13 காலத்திலும், ஜூலை 17 - ஆக.16, அக். 18 - நவ. 16 காலங்களிலும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மார்ச் 15 - மே 14 காலத்திலும், ஆக. 17 - செப். 16, நவ.17 - டிச. 15 காலங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன், உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வருமானத்தில் இருந்த தடைகளை நீக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். செல்வம், செல்வாக்கை உயர்த்துவார். அரசியலில், அதிகாரத்தில், பணியில் உள்ளவர்களுக்கு யோகத்தை வழங்குவார். நோய், எதிர்ப்பு, வம்பு, வழக்குகளில் இருந்து விடுவிப்பார். புதிய தொழில், வேலை வாய்ப்பு கனவுகளை நனவாக்குவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார்.
பொதுப்பலன்: கடந்த ஆண்டு ஏற்பட்ட நெருக்கடி விலகும். முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். உழைப்பிற்கேற்ற வருமானமும் முயற்சிக்கேற்ற ஆதாயமும் கிடைக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.
தொழில்: தொழில் முன்னேற்றமடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ். மருத்துவம், மருத்துவர்கள். கெமிக்கல், பெட்ரோல், உணவகம், நிதி நிறுவனம், இன்டஸ்ட்ரீஸ், பங்கு வர்த்தகம் கை கொடுக்கும். ஆசிரியர்கள், காவல் துறையினர், கலைஞர்கள் முன்னேற்றமடைவர்.
பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு பணியில் உயர்வு கிடைக்கும். வேலை நிரந்தரமாகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். திறமைக்கு மதிப்புண்டாகும்.
பெண்கள்: திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். பணிபுரியும் இடத்தில் சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
கல்வி: உயர் கல்விக்குரிய யோகம் இருப்பதால் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது. தேர்வு வரையில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கவனம் செலுத்துவதால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
உடல்நிலை: ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறை நீங்கும். நரம்புக் கோளாறு, பரம்பரை நோய், நீண்ட நாளாக நோய்வாய்ப்பட்டவர்கள், விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றவர்கள் குணமடைவர்.
குடும்பம்: நெருக்கடி நிலை மாறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். பணப்புழக்கம் இருக்கும். சொந்த வீடு, வாகனம் என உங்கள் நிலை உயரும். பொன் பொருள் சேரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். வேண்டுதல்களை நிறைவேற்றுவீர். உறவினர்களுடன் இணக்கம் உண்டாகும்.
பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட்டு வர வாழ்வு சுபிட்சமாகும்.