நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது ஆனந்தக்குடி கிராமம். மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது ஆனந்தக்குடி. இங்கு ஆனந்தவல்லி சமேத ஆனந்த நடனபுரீஸ்வரர் கோயில் கொண்டுள்ளார். சோழமன்னன் கட்டிய திருத்தலங்களில் இதுவும் ஒன்று. கோயிலுக்கு எதிரில் உள்ள அழகான திருக்குளத்திற்கு பால் குளம் என்று பெயர். சிவனருளால், குளத்து நீரானது பாலைப் போலவே வெண்மை நிறத்தில் இருந்தது.