பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று பகல்பத்து 3ம் நாள் உற்சவத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் கடந்த 31ம் தேதி துவங்கியது. நேற்று 3ம் நாள் உற்சவத்தில் உற்சவர் பெருமாள் ராஜகோபாலன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 9ம் தேதி வரை பகல்பத்து உற்சவம் நடக்கிறது. 9ம் தேதி உற்சவர் பெருமாள் நாச்சியார் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 10ம் தேதி பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.