குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை தேரோட்டம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2025 05:01
தென்காசி; குற்றாலநாதர் கோயில் சித்திரை சபையில் திருவாதிரை தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது.
நடராஜர் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திர சபை தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது. இங்கு திருவாதிரை திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் இன்று தேரோட்டம் நடந்தது. விநாயகர் தேர், முருகன் தேர், நடராஜர் தேர், குற்றாலநாதர் சுவாமி தேர், குழல்வாய் மொழியம்மை தேர் ஆகிய 5 தேர்களை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். வரும் 11ம் தேதி சித்திர சபையில் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. வரும் ஜனவரி 13ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு மேல் சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், அதனைத் தொடா்ந்து 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது.