புதுச்சேரி வரதராஜபெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2025 10:01
புதுச்சேரி; வரதராஜபெருமாள் கோயிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனர்.
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வைணவத்திருதலங்களில் இன்று அதிகாலை வெகுசிறப்பாக நடைபெற்றது. புதுச்சேரி நகரின் காந்தி வீதியில் உள்ள பழமையான ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதாசி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா, கோவிந்தா கோஷம் எழுப்பி பெருமாளை தரிசித்தனர்.