பதிவு செய்த நாள்
11
ஜன
2025
04:01
விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம்; ஆற்றல் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் முன்னேற்றமான மாதம். இதுவரை தடைபட்ட வேலை ஒவ்வொன்றாக நடக்கும். எடுக்கின்ற முயற்சி லாபத்தை உண்டாக்கும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சுயமாக தொழில் ஆரம்பிக்க நினைத்தவரின் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். தாமதம் என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். சின்னச் சின்ன சங்கடம் வந்து செல்லும். குழந்தைகளுக்காக அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர். அவர்களைப்பற்றிய சிந்தனை மேலோங்கும். நீங்கள் நினைத்த வேலை வேகமாக நடந்தேறும். புதிய சொத்து வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வங்கியில் கேட்ட பணம் கைக்கு வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். உழைப்பாளர் நிலை உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருந்து வழிகாட்டுவார். வெளியூர் பயணம் லாபத்தை ஏற்படுத்தும். வெளிநாடு செல்வதற்கு முயற்சி மேற்கொண்டவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பூமி வாங்கும், விற்கும் முயற்சிகளில் கவனமாக இருப்பது தேவை. மூல பத்திரத்தைப் படிக்காமல் எந்த ஒரு முடிவிற்கும் வர வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த செல்வாக்கு உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நேற்றைய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: பிப். 8.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 18, 21, 27, 30. பிப். 3, 9, 12.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
அனுஷம் : எதிலும் உறுதியாக இருந்து வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் யோகமான மாதம். சனிபகவான் உங்கள் ராசியையும் பார்ப்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் பின் விளைவு பற்றி யோசித்து செயல்படுவது நல்லது. தை பிறந்தால் வழி பிறக்கும். சூரியனால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்தப் போகிறார். கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடி, பிரச்சனை, சங்கடம் எல்லாம் விலகும். நினைத்த வேலைகளை எந்தவிதமான தடையுமில்லாமல் நடத்தி முடித்திடக்கூடிய நிலை உண்டாகும். தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலம் அதிகரிக்கும். கேதுபகவான் தேவைக்கேற்ற வருமானத்தை வழங்குவார். முயற்சிக்கேற்ற லாபத்தை ஏற்படுத்துவார். ஒரு சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர். உங்கள் நீண்ட நாள் கனவு நனவாகும். ஆசைபட்ட இடத்தை வாங்கும் நிலை உண்டாகும். வியாபாரிகளுக்கும், கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தடைபட்டிருந்த வருமானம் வரத்தொடங்கும். பழைய முதலீட்டில் இருந்து எதிர்பார்த்த லாபம் வரும். சுக்கிரன் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செய்து வரும் தொழிலை விரிவு செய்யக்கூடிய நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். பிள்ளைகள் நலனுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். மாணவர்கள், ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்று படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: பிப். 8, 9.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 18, 26, 27.
பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட நன்மைகள் நடந்தேறும்.
கேட்டை: அனைத்திலும் வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் அதிர்ஷ்டமான மாதம். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேது பகவான் செய்துவரும் தொழிலில் லாபத்தை ஏற்படுத்துவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். பணியாளர், ஒத்துழைப்பை அதிகரிப்பார். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நேற்று இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். டெபாசிட் செய்த பணத்திருந்து லாபம் வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். முயற்சி ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் இது உங்களுக்கு யோகமான காலம். உங்கள் செல்வாக்கும், திறமையும் வெளிப்படும். எடுத்த வேலைகளை முடித்து அதில் லாபம் காண்பீர். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகி இணக்கம் ஏற்படும். எல்லா வகையிலும் இம் மாதம் உங்களுக்கு யோகமான மாதம். நினைத்த வேலைகளை நினைத்தபடி உங்களால் நடத்திக்கொள்ள முடியும். ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர். மாணவர்கள் படிப்பின் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நன்மையை ஏற்படுத்தும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: பிப். 9, 10.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 14, 18, 23, 27. பிப். 5.
பரிகாரம்: கள்ளழகரை வழிபட வளம் உண்டாகும்.