கம்பம்; கம்பம் புதுபஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அங்களாம்மன் கோயில் சிவலிங்க விஸ்வகர்ம ஆசாரிமார் உறவின்முறைக்கு பாத்தியப் பட்டதாகும். இந்த கோயிலில் அங்காளம்மன், கருப்பசாமி, விநாயகர், முருகன் போன்ற தெய்வங்கள் உள்ளன. தற்போது நாகம்மாள், பாதாள ரூபினி உள்பட ஏழு உப தெய்வங்களின் பீடங்கள் புனரமைக்கப்பட்டு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. புதிதாக பிரதிஷ்டை செய்ததற்காக கணபதி ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகள் துவங்கியது. கலச பூஜைகள் நடந்தது. கலச பூஜைகளில் புனித நீர் ஊற்றி அங்காளம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பூஜைகளில் விஸ்வகர்ம சமுதாய பொதுமக்களும், இதர சமுதாய பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர். பிரசாதங்கள் வழங்கப்பட்டது.