திருப்பரங்குன்றம் மலையின் புனிதம் காக்க நடவடிக்கை; கிராம தலைவர், பிரமுகர்கள் மனு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2025 11:01
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலையின் புனிதம் காக்க மலைமேல் உயிர் பலி கொடுக்க தடை விதிக்குமாறு தாசில்தாரிடம், பூர்வீக கிராம தலைவர் சுவாமிநாதன், மிராஸ்தாரர்கள் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானின் முதல் படை வீட்டில் இருக்கும் மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சைவ சமயம் சார்ந்த ஒரு புனித தலம். இந்த மலையில் சைவ கடவுள்களான விநாயகர், பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், காசி விஸ்வநாதர் கோயில், குகைக் கோயில் உள்ளன. மலையில் சித்தர்களும், முனிவர்களும் வாழ்ந்து வருவதும், கங்கைக்கு நிகரான புனித தீர்த்தம் அடங்கிய சுனையும் உள்ளடக்கியது. மலை மேல் உயிர்பலி கொடுப்பது சைவ சமய இறையாண்மைக்கு விரோதமானது. இதுநாள் வரை இது நடந்ததில்லை. புதிதாக இது போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் அனைத்து ஹிந்து பக்தர்களின் மனதை புண்படுத்தும். கிராம மக்களிடையே சகோதரத்துவம், ஒற்றுமை நிலைகுலைய வாய்ப்புள்ளது. எனவே திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க மலை மேல் மிருக உயிர் பலி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.