ராமேஸ்வரம் கோயில் வீதியில் மாடுகள் உலா : பக்தர்கள் அச்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2025 04:01
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரத வீதியில் மாடுகள் உலா வருவதால் பக்தர்கள் அச்சம் அடைகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்பு கருதி 2013 முதல் கோயில் ரத வீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை செய்தனர். இதனால் நான்கு ரதவீதியில் பக்தர்கள் சிரமம் இன்றி சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் பக்தர்கள் அதிகம் நடமாடும் ரதவீதி, சன்னதி தெரு, அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான மாடுகள் உலா வருகிறது. இந்த மாடுகளுக்கு கீரை தானம் செய்யுங்கள் எனக்கூறி வியாபாரிகள் கீரை விற்கின்றனர். கீரையை உண்ண ஆவேசமாக ஓடிவரும் மாடுகள் பக்தர்களை முட்டி தள்ளிவிடுகிறது. இதனால் பக்தர்கள் பலர் காயமடைந்து உள்ளனர். கோயில் மேல, கீழவாசலில் உலாவரும் மாடுகளால் பக்தர்கள் அச்சத்துடன் கோயிலுக்குள் செல்கின்றனர். மேலும் மாடுகளால் இப்பகுதியில் போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. எனவே மாடுகளை பிடித்து உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.