பதிவு செய்த நாள்
12
பிப்
2025
03:02
மிதுனம்: மிருகசீரிடம் 3, 4ம் பாதம்; நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் யோகமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் செவ்வாய் பிப். 21 முதல் வக்ர நிவர்த்தியாகி ராசிக்குள் சஞ்சரிப்பதால் செயல்களில் முழுமையான கவனம் தேவை. அவசரப்பட்டு எந்தவொரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். அது உங்களுக்கு எதிர்மறையான பலன்களையே ஏற்படுத்தும். புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் சங்கடங்களில் இருந்து வெளியில் வருவீர். உழைப்பிற்கேற்ற, உங்கள் முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். குடும்பத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். விரய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் பல வழியிலும் செலவு அதிகரிக்கும். ஒரு சிலர் புதிய இடம், வாகனம் வாங்குவீர். குருவின் பார்வைகள் 6, 8 ம் இடங்களுக்கு உண்டாவதால் உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்குகள் சாதகமாகும். மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்படும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். கணவன் மனைவிக்குள் இருந்த இடைவெளி குறையும். சேமிப்பு உயரும். பிள்ளைகள் நலனை மனதில் வைத்து செயல்படத் தொடங்குவீர். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் கூடுதல் அக்கறை தேவை.
சந்திராஷ்டமம்: பிப். 25.
அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 18, 23, 27. மார்ச். 5, 9, 14.
பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மைகள் நடந்தேறும்.
திருவாதிரை: எப்போதும் எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் நன்மையான மாதமாகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் ராகு தொழில், வியாபாரத்தில் ஆதாயத்தை ஏற்படுத்துவார். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனிபகவான் உங்கள் வாழ்வை வளமாக்குவார். நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வழக்கில் சாதகமான நிலையை உண்டாக்குவார். விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான் 4, 6, 8ம் இடங்களைப் பார்ப்பதால் கடந்த மாதம் அஷ்டம சூரியனால் ஏற்பட்ட நெருக்கடி விலக ஆரம்பிக்கும். தாய்வழி உறவு உங்கள் வேலைகளில் பங்கெடுப்பர். அலைச்சலும் மன உளைச்சலும் இல்லாமல் போகும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். அலுவலகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் திட்டமிட்டிருந்த வேலை நடந்தேறும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஜென்ம ராசிக்குள் உங்கள் லாபாதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் செயல்களில் பதட்டம் இருக்கும். அதனால் மனக்குழப்பமும் உண்டாகும். எடுத்த முயற்சியில் உறுதியாக இருப்பதும் உங்கள் நிலையை உயர்த்தும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் பாராட்டும், எதிர்பார்த்த பொறுப்பும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. உழைப்பாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: பிப். 25, 26.
அதிர்ஷ்ட நாள்: பிப். 13, 14, 22, 23. மார்ச். 4, 5, 13, 14.
பரிகாரம்: விஷ்ணு துர்கையை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்; புத்தி சாதுர்யமும் கொண்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் யோகமான மாதம். கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடி, பிரச்னை நீங்கும். சனி பகவான் நினைத்த வேலைகள் நினைத்தபடி நடக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவார். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். உங்கள் நட்சத்திரநாதன் குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுபச்செலவு அதிகரிக்கும். செலவிற்கேற்ற வரவும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் உடல்நிலை சீராகும். சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வரவேண்டிய பணம் வரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். ராசிநாதன் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். சிறு வியாபாரிகள் புதியதாக முதலீடு செய்வதற்கு முன் நன்றாக யோசிப்பது அவசியம். மாணவர்கள் பொதுத்தேர்வு வரையில் ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பதும், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதும் நல்லது.
சந்திராஷ்டமம்: பிப். 26, 27.
அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 21, 23. மார்ச். 3, 5, 12.
பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.