பதிவு செய்த நாள்
12
பிப்
2025
03:02
கடகம்: புனர்பூசம் 4ம் பாதம்; பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் யோகமான மாதம். இதுவரை இருந்த நெருக்கடி இந்த மாதத்தில் விலகும். நீங்கள் நினைத்திருந்த வேலை நடந்தேறும். தடைபட்டிருந்த முயற்சி வெற்றியாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். குழந்தை பாக்கியம் வேண்டியவருக்கு நல்ல தகவல் கிடைக்கும். செல்வாக்கு உயரும். பொருளாதார நெருக்கடி சீராகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். கடன்காரர்களால் ஏற்பட்டிருந்த நெருக்கடி நீங்கும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். நிலம் வாங்குவது, வீடு வாங்குவது போன்று செலவை மாற்றினால் அது உங்களுக்கு யோகமாகும். சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். உழைப்பாளர்கள் நிலை உயரும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: பிப். 27.
அதிர்ஷ்ட நாள்: பிப். 20, 21, மார்ச் 2, 3, 11, 12.
பரிகாரம்: குரு பகவானை வழிபட நன்மை நடக்கும்.
பூசம்: நினைத்ததை சாதிக்கும் வரை வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் லாப ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகம் தொழிலில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். மாதம் முழுவதும் சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு பணியாளர் தங்கள் வேலையில் முழுமையான ஈடுபாட்டுடன் இருப்பது அவசியம். செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒரு சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். என்றாலும், நீண்டநாள் நோய் குணமாகும். ஆரோக்கியமாக நடைபோட தொடங்குவீர்கள். கேது பகவான் உங்களை உற்சாகமாக வைத்திருப்பார். வேகமாக செயல்பட வைப்பார். நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். குழந்தைகளின் நலனுக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் சுப செயல்கள் நடக்கும். ஒருசிலர் புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும்.
சந்திராஷ்டமம்: பிப். 27, 28.
அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 20, 26. மார்ச் 2, 8, 11.
பரிகாரம்: சுவாமிநாத சுவாமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
ஆயில்யம் ; நினைப்பதை சாதிக்கும் திறமை கொண்ட உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதம். இதுவரை இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவு வரும். வங்கியில் கேட்டிருந்த பணம் கிடைக்கும். வியாபாரி கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உறவினர்கள் உங்களைத் தேடிவருவர். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். கடன்காரர்களால் ஏற்பட்ட தொல்லை விலகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைத் தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். தொழிலில் லாபம் அதிகரிப்பார். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயி கவனமாக செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: பிப். 28, மார்ச் 1.
அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 20, 23, மார்ச் 2, 5, 11, 14.
பரிகாரம்: நரசிம்மரை வழிபட சங்கடம் விலகும்.