பதிவு செய்த நாள்
12
பிப்
2025
03:02
தனுசு: மூலம் ; படிப்பினைகளின் வழியாக வாழ்வை செம்மையாக நடத்தி வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில், ராசிநாதன் குரு பகவான் தன் பார்வைகளின் வழியாக உங்களுக்கு முன்னேற்றத்தை வழங்குவார். செய்துவரும் தொழில், வியாபாரம் எதிர்பார்த்த ஆதாயத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். வேலைத் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்து வந்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு அமையும். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சி சாதகமாகும். ஒரு சிலருக்கு புதிய இடம் வாங்கும் யோகம் உண்டாகும். இதுநாள் வரையில் உங்களுக்கிருந்த பிரச்னை, நெருக்கடி, சங்கடம் எல்லாம் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். நினைத்த வேலைகளை நினைத்தபடி செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகி நிம்மதியான நிலை உண்டாகும். வார்த்தைகளில் தெளிவு இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் கூடும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 9.10.
அதிர்ஷ்ட நாள்: பிப். 16, 21, 25. மார்ச் 3, 7, 12.
பரிகாரம்: ஏகாம்பரேஸ்வரரை வாழ்வில் வளம் உண்டாகும்.
பூராடம்: தன்னுடைய நிலையில் எப்பொழுதும் சரியாக இருக்கும் உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் நட்சத்திர நாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் உங்களை வெற்றி நடை போட வைப்பார். முயற்சி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானும் சூரியனும் எடுத்த வேலைகளை எல்லாம் முடித்திடக்கூடிய சக்தியை வழங்குவர். தடைபட்ட வேலை எளிதாக நடக்கும். புதிய முயற்சி சாதகமாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். கேட்டிருந்த இடத்திலிருந்து பணம் வரும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். கோயிலுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றி வருவீர். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். உழைப்பாளர் நிலை உயரும். காணாமல் போன பொருள் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 10, 11.
அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 21, 24. மார்ச் 3, 6, 12.
பரிகாரம்: ஆண்டாள் ரெங்கமன்னாரை வழிபட நன்மை உண்டாகும்.
உத்திராடம் 1ம் பாதம் ; தெளிவான சிந்தனையுடன் மனதில் நம்பிக்கையோடு வாழும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் யோகமான மாதம். உங்கள் நட்சத்திர நாதன் சூரியன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் வேலை எல்லாம் வெற்றியாகும். தடைபட்ட முயற்சி எல்லாம் இனி விறு விறுவென நடக்கும். அரசு வழி முயற்சி சாதகமாகும். தொழில் தொடங்குவதற்கும் வெளிநாடு செல்வதற்கும் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் இருந்து விடுதலைக் கிடைக்கும். ராசிநாதனின் பார்வை ஜீவன ஸ்தானத்திற்கும், தன குடும்ப ஸ்தானத்திற்கும் கிடைப்பதால் தொழில் விருத்தியாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த வரவு வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கடன்களுக்காக வட்டிக்கு மேல் வட்டிகளாக கட்டி வந்தவர்கள் நெருக்கடிகளில் இருந்து விடுபட்டு கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். பிள்ளைகள் நலனுக்காக செலவு செய்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விரயாதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் செயல்களில் வேகம் இருக்கும். செலவு அதிகரிக்கும். அவை சுபச்செலவாக மாறும். ஒரு சிலர் புதிய இடம், வீடு என வாங்குவீர்கள். புதிய வீட்டில் குடியேறக்கூடிய நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். குடும்பத்தில் தம்பதிகளுக்குள் இருந்த பிரச்னை விலகி இணக்கமான நிலை உண்டாகும். பணியாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 11.
அதிர்ஷ்ட நாள்: பிப். 19, 21, 28. மார்ச் 1, 3, 10, 12.
பரிகாரம்: சூரியபகவானை வழிபட நன்மை உண்டாகும்.