பதிவு செய்த நாள்
12
பிப்
2025
03:02
விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம் ; பின்வருவதை முன்னதாகவே அறிந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் யோகமான மாதம். குரு பகவான் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் செல்வாக்கு உயரும். நினைத்த வேலை நடக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணத்திற்குரிய நிலை அமையும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல நிலை கை கூடும். ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தொண்டர்கள் பலம் கூடும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்து சேரும். ஒரு சிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர். வெளியூர் பயணம் நன்மையில் முடியும். தெய்வ வேண்டுதல்களை நிறைவேற்றி முடிப்பீர். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். ராசிநாதன் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: மார்ச் 7.
அதிர்ஷ்ட நாள்: பிப். 18, 21, 27. மார்ச் 3, 9, 12.
பரிகாரம்: முருகனை வழிபட வளம் உண்டாகும்.
அனுஷம்: நினைத்ததை நடத்தி முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். இதுவரை இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். உங்கள் வாழ்க்கையில் புதிய பாதைத் தெரியும். இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்பார்த்த பணம் வரும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை வழங்குவீர்கள். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். கடனாக கேட்ட பணம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கிய விவகாரம் முடிவிற்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை கூடும். பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கு தயாராவீர்கள். விவசாயிகள் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது நன்மையாகும். பணியாளர்களுக்கு இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். குலதெய்வ கோயிலுக்கு சென்று வர முடிவெடுப்பீர்கள்.
சந்திராஷ்டமம்: மார்ச் 8.
அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 18, 26, மார்ச் 9.
பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட குறை தீரும்.
கேட்டை; புத்தி சாதுர்யமும் தைரியமும் கொண்டு துணிச்சலாக செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதம். திட்டமிட்டிருந்த வேலைகளை ஒவ்வொன்றாக நடத்தி முடிப்பீர். உங்கள் நட்சத்திரநாதனின் சாதகமாக சஞ்சரித்தால் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர். தடைபட்ட வேலைகளை நடத்தி லாபம் காண்பீர்கள். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.
சனி பகவான் சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்த்தாலும், அவருடைய 3ம் பார்வை 6ம் இடத்தைப் பார்ப்பதால் உடல்நிலையில் இந்த சங்கடம் விலகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதுடன், குருவின் பார்வையும் அங்கு உண்டாவதால் வரவு அதிகரிக்கும். இதுவரை இருந்த போராட்டம் முடிவிற்கு வரும். வியாபாரிகளின் நிலை முன்னேற்றம் அடையும். அலுவலகப்பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். மாணவர்களுக்கு படிப்பின் மீது கவனம் கூடும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு தகுதியான வரன் வரும். குடும்பத்தினர் ஒத்துழைப்புடன், சகோதரர்கள் உங்களுக்கு உதவி புரிவர். உழைப்பாளர்களின் நிலை உயரும். புதிய முயற்சி சாதகமாகும். நெருக்கடி நீங்கும். பிள்ளைகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 9.
அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 18, 23, 27. மார்ச் 5, 14.
பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.