பதிவு செய்த நாள்
12
பிப்
2025
03:02
மகரம்: உத்திராடம் 2, 3, 4ம் பாதம் ; வாழ்வில் முன்னேற்றம் ஒன்றினை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் மிக யோகமான மாதம். இதுவரை இருந்த நெருக்கடி ஒவ்வொன்றாக உங்களை விட்டு விலகும். மாதம் முழுவதும் குரு பகவானின் பார்வை ராசிக்கு இருப்பதால் நினைத்த வேலைகளை நினைத்தபடி உங்களால் நடத்திக்கொள்ள முடியும் தெய்வ அருளும், பெரியோர்கள் துணையும் இந்த நேரத்தில் உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்துசேரும். புதிய வீட்டில் குடியேறக்கூடிய நிலையும் உண்டாகும். பணவரவில் இருந்த தடை விலகி எதிர்பார்த்த பணம்வரும். நீங்கள் எடுக்கின்ற முயற்சி இந்த நேரத்தில் வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். தொழிலில் முன்னேற்றம் அடையும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். உங்கள் மதிப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் நிலையில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். விவசாயிகளுக்கு வரவு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் போன்றவர்களுக்கு தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
சந்திராஷ்டமம்: பிப். 13, மார்ச் 12.
அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 19, 26, 28. மார்ச் 1, 8, 10.
பரிகாரம்: கபாலீஸ்வரரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
திருவோணம்: மனதில் தெளிவும் செயலில் வலிமையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். சமீப காலத்தில் நீங்கள் சந்தித்து வந்த நெருக்கடிகளில் இருந்து விடுதலை உண்டாகும். நீங்கள் எடுக்கின்ற முயற்சி ஒவ்வொன்றும் வெற்றியாகும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய முயற்சி சாதகமாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் கூடும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். அலுவலகத்தில் உண்டான சங்கடம் தீரும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சனியும் சூரியனும் சஞ்சரித்து வருவதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. இந்த நேரத்தில் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பிறரை பகைத்துக்கொள்ளாமல் உங்கள் வேலைகளில் மட்டும் கவனமாக இருந்தால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடையலாம். வரவு செலவில் எப்போதும் நிதானம் தேவை. அஷ்டம ஸ்தானத்திற்கும், சுக ஸ்தானத்திற்கும் சனி பகவானின் பார்வை உண்டாவதால் உடல் நிலையில் கவனம் வேண்டும். மருத்துவர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுவது நல்லது. ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தெய்வ அருள் உங்களைப் பாதுகாக்கும். இதுவரை இருந்த நெருக்கடி இந்த மாதத்தில் இல்லாமல் போகும்.
சந்திராஷ்டமம்: பிப். 13, 14. மார்ச் 13.
அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 20, 26. மார்ச் 2, 8, 11.
பரிகாரம்: குல தெய்வத்தை வழிபடுவதால் நன்மை அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2ம் பாதம் ; எதிலும் உறுதியாக நின்று வெற்றி பெற்றுவரும் உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் வேலைகளில் தைரியமும் தன்னம்பிக்கையும் இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இதுவரை வக்கிரமாய் இருந்த உங்கள் நட்சத்திரநாதன் செவ்வாயால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் இனி வெற்றியாகும். இதுவரை இருந்து வந்த பிரச்னை முடிவிற்கு வரும். தொழிலில் ஏற்பட்ட தடை விலக ஆரம்பிக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்களில் இருந்து விடுதலைக் கிடைக்கும். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுபகவான் எடுக்கும் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். குருபகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு இருப்பதால் யோகமான நிலை இந்த மாதத்தில் உங்களுக்கு உண்டாகும். தைரியமாக செயல்படுவோருக்கு லாபம் கூடும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். புதிய சொத்து சேரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். மாணவர்கள் ஆசிரியரின் ஆலோசனைகளை கேட்டு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர். விவசாயிகளுக்கு இருந்து வந்த நெருக்கடி விலகும். உழைப்பாளர்கள் நிலை உயரும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் கூடும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமண வயதினருக்கு வரன் கைகூடி வரும்.
சந்திராஷ்டமம்: பிப். 14. மார்ச் 14.
அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 18, 26, 27. மார்ச் 8, 9.
பரிகாரம்: செந்தில் வேலனை வழிபட சுபிட்சம் உண்டாகும்.