பதிவு செய்த நாள்
12
பிப்
2025
03:02
கும்பம்: அவிட்டம் 3, 4ம் பாதம் ;நினைப்பதை சாதிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். உங்கள் நட்சத்திரநாதன் செவ்வாயால் உங்கள் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. அடுத்தவர் பிரச்னைகளில் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். அது உங்களுக்கே எதிர்மறையான நிலையை உருவாக்கும். ஜென்ம ராசிக்குள் சனி பகவான் சஞ்சரித்து சப்தம ஸ்தானத்தை பார்ப்பதால் வாழ்க்கைத் துணையுடனும், நண்பர்களுடனும் இணக்கமற்ற நிலையை ஏற்படுத்தும். நிதானம் அவசியம். முயற்சி ஸ்தானத்திற்கு சனி பகவானால் எடுக்கும் வேலை வெற்றியாகும். தொழிலில் கவனமாக செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். கேதுவினால் பாதிப்படைந்து வந்த உங்களுக்கு குரு பகவானின் பார்வையால் மாற்றம் உண்டாகும். உடல்நிலை, செல்வாக்கில் ஏற்பட்ட நெருக்கடி, சங்கடம், பாதிப்பு விலகும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது இக்காலத்தில் நன்மையாகும். அலுவலகப் பணியில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது அவசியம். ஜீவனஸ்தானத்திற்கு குரு பகவானின் பார்வை உண்டாவதால் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. விவசாயிகள் கவனமாக செயல்பட வேண்டும்.
பணியாளர்கள் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது அவசியம்.
சந்திராஷ்டமம்: பிப். 15. மார்ச் 14.
அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 18, 26. மார்ச் 8, 9.
பரிகாரம்: அனுமனை வழிபட நன்மை உண்டாகும்.
சதயம் : அனைத்திலும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் நட்சத்திரநாதன் ராகு, தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவில் தடை இருக்காது. குடும்பத்தில் ஏதேனும் ஒரு குழப்பம் இருந்து கொண்டிருக்கும். உங்கள் வார்த்தைகளால் சில சங்கடம் ஏற்படும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 3, 10ம் இடங்களில் பதிவதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். குரு பகவானும் 10ம் இடத்தைப் பார்ப்பதால் தடைபட்ட வேலையும் நடக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும். விரய ஸ்தானத்திற்கு குரு பகவானின் பார்வை உண்டாவதால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் சுபச் செயல் நடக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலக ஆரம்பிக்கும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். சுக்கிரனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். நீங்கள் சந்தித்து வந்த பிரச்னை முடிவிற்கு வரும். அனைத்திலும் புதிய பாதை தெரியும். மாணவர்கள் வழக்கத்தைவிட படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிறு வியாபாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் செயல்களில் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: பிப். 13, 17, 22, 26. மார்ச் 4, 8.
அதிர்ஷ்ட நாள்: பிப். 17,22,26 மார்ச் 4,8,13
பரிகாரம்: தில்லை காளியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்: பிறருக்கு ஆலோசனை வழங்கி அவர்களை முன்னேற்றம் காண வைக்கும் திறமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் யோசித்து செயல்பட வேண்டிய மாதம். குரு பகவான் 4ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலையிலும் மன நிலையிலும் ஏதேனும் ஒரு சங்கடம் இருந்து கொண்டே இருக்கும். உங்களுடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக மாறுவர். தாய்வழி உறவுகளால் குடும்பத்தில் ஏதேனும் சலசலப்பு இருந்து கொண்டிருக்கும். குரு பகவானின் பார்வை அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானங்களுக்கு உண்டாவதால் உடல்நிலையில் ஏற்படும் பாதிப்பு விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சுபச்செலவு அதிகரிக்கும். புதிய முயற்சி பலிக்கும். ஒரு சிலர் பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவீர். கேட்ட பணம் கிடைக்கும். நேற்று எதிர்பார்த்த ஒப்பந்தம் கைக்கு வரும். வியாபாரிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலக ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச்செல்வதால் சங்கடம் நெருங்காமல் போகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது. சிறு வியாபாரி ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்பது அவசியம். பணியாளர்கள் வழக்கமான வேலையில் மட்டும் ஈடுபடவும்.
சந்திராஷ்டமம்: பிப். 17.
அதிர்ஷ்ட நாள்: பிப். 21, 26. மார்ச் 3, 8, 12.
பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.