சுவாமி, அம்மன் புறப்பாடு : இன்று ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2025 10:02
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் புறப்பாடாகி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருள உள்ளதால், இன்று முழுவதும் கோயில் நடை அடைக்கப்பட உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்.,18ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 3ம் நாள் விழாவான இன்று அதிகாலை 2:30 மணி முதல் 3 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். இதனைத்தொடர்ந்து கால பூஜை, சாயரட்ச பூஜை நடந்ததும் காலை 7 மணிக்கு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் கோயில் இருந்து புறப்பாடாகி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருள்வர். இங்கு மகா தீபாராதனை முடிந்ததும் இரவு 10 மணிக்கு சுவாமி, அம்மன் திருக்கோயிலுக்கு திரும்புவார்கள். இதனால் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும் என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.