காஞ்சிபுரம்; காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திரரின், ஜெயந்தி மஹோத்ஸவம், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நேற்று காலை, மஹா சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து வேதபாராயணம், வித்வத் ஸதஸ், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம் நடந்தது. நாளை காலை 7:00 மணி முதல், மஹா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில், அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹாதீப ஆராதனை நடக்கிறது.