பதிவு செய்த நாள்
24
பிப்
2025
12:02
வால்பாறை; சின்கோனா(டான்டீ) சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா(டான்டீ) எஸ்டேட் முதல் பிரிவு. இங்குள்ள சக்தி மாரியம்மன் கோவிலின், 59ம் ஆண்டு திருவிழா கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கடந்த, 20ம் தேதி இரவு சக்தி கும்பம் எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். விழாவையொட்டி நாள் தோறும் காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் நேற்று காலை, 6:00 மணிக்கு பக்தர்கள் அலகுபூட்டி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டபூக்குண்டத்தில், கோவில் பூசாரி பூ உருண்டை வீசி அம்மனின் அருள் பெற்ற பின், பக்தர்கள் ஒவ்வொருவராக பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.