மகாசிவராத்திரி, பிரதோஷம்; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2025 01:02
விருதுநகர்; விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மாசி தேய்பிறை பிரதோஷத்தை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்காக இன்று முதல் வரும் 28ம் தேதி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதித்துள்ளது. இந்நிலையில் இன்று பிரதோஷ பூஜைக்காக வரை காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பக்தர்கள் மலை ஏறி தரிசனம் செய்தனர். நாளை மகாசிவராத்திரியை முன்னிட்டு தரிசனம் செய்ய அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.