பதிவு செய்த நாள்
25
பிப்
2025
01:02
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா சிறப்பாக நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாக விளங்கும் இந்த மகா கும்பமேளா வில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
உபி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்வு ஜன., 13ல் துவங்கியது. மகா சிவராத்திரி தினமான நாளையுடன் (பிப்., 26) நிறைவடைகிறது. இதுவரை இதுவரை 64 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் மஹா கும்ப மேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர். இங்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் தினமும் நடைபெற்று வருகிறது. ஒன்றரை மாதமாக விமரிசையாக நடந்து வரும் மகா கும்பமேளா, மகா சிவராத்திரி தினமான நாளையுடன்(பிப்., 26) நிறைவடைகிறது; இதனால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சன்னியாசிகள், அகோரிகள், நாகா பாபாக்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். பல கோடி பேர் வந்து செல்லும் பகுதியை துாய்மையாக வைக்க, 15 ஆயிரம் துாய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.