திருப்பதி அலிபிரி நடைபாதையில் அதிகாலையில் வந்த சிறுத்தை; பக்தர்கள் அச்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2025 01:03
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் அலிபிரி நடைபாதையில் உள்ள காலிகோபுரம் அருகே உள்ள கடைகள் முன்பு அதிகாலை 1 மணியளவில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிவதை அங்குள்ள வியாபாரிகள் கண்டனர். இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வீடியோ காட்சியில் சிறுத்தை அதிகாலை 1 மணி அளவில் சுற்றி வருவதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் பக்தர்களை தொடர்ந்து எச்சரிக்கை செய்து அனுப்பி வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக கடந்த ஒரு மாதங்களாக அலிபிரி நடைப்பாதை வழியாக பக்தர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு 10 மணியுடன் பக்தர்களை அனுமதிப்பது நிறுத்தப்படுகிறது. மீண்டும் அதிகாலை 5 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறது. எனவே சிறுத்தை வந்த போது பக்தர்கள் யாரும் இல்லாததால் எந்த வித அசம்பாக்கமும் நடைபெறவில்லை. சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பக்தர்கள் தனித்தனியாக செல்வதை தவீர்த்து கூட்டமாக செல்ல வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.