Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்த்தி விரதம்; விநாயகனை வழிபட ... ‘லேட்டரைட்’ கற்களை பயன்படுத்தி கட்டப்பட்ட ஸ்ரீ நிமிஷாம்பா கோவில் ‘லேட்டரைட்’ கற்களை பயன்படுத்தி ...
முதல் பக்கம் » துளிகள்
அம்ருதேஸ்வரா கோவில்; ஹொய்சாளா கலையின் பிரதிபலிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அம்ருதேஸ்வரா கோவில்; ஹொய்சாளா கலையின் பிரதிபலிப்பு

பதிவு செய்த நாள்

04 மார்
2025
01:03

கர்நாடகாவின் சிக்கமகளூரு, அம்ருதாபுராவில் உள்ளது, அம்ருதேஸ்வரா கோவில். இது ஒரு சிவன் கோவிலாகும். மூலவராக அம்ருதேஸ்வராவும், அம்மன் சன்னிதியில் சாரதா தேவியும் அருள்பாலிக்கின்றனர். இது தவிர ஏராளமான ஹிந்து கடவுள்களின் விக்ரஹங்களும் உள்ளன. கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் ஹொய்சாளா கட்டடக்கலை பிரதிபலிக்கிறது. இந்த கோவில் போலவே, அச்சு அசலாக பெலவாடியில் உள்ள வீர நாராயணா கோவிலும் காட்சி அளிக்கிறது. இந்த கோவில், கி.பி., 1196 ம் ஆண்டில், ஹொய்சாளா மன்னர் வீரா பல்லாலா ஆட்சியில் கட்டப்பட்டது.


பரந்து விரிந்த மண்டபம்; கோவிலில் உள்ள துாண்கள், பெரிய அளவிலான பரந்து விரிந்த மண்டபத்தை தாங்கி பிடிக்கின்றன. ஹொய்சாளா கட்டட கலையில் கட்டப்பட்ட மற்ற கோவில்களை விட, இக்கோவில் பெரிய அளவில் உள்ளது. ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்களின் குறிப்புகள் நிறைய இடங்களில் பொறிக்கப்பட்டு உள்ளன. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் ‘ஓம்’ என்று எழுதும் நடைமுறை, இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.வேண்டுதல்கள் நிறைவேறினால், பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் சேலையை காணிக்கையாக வழங்கும் நடைமுறை உள்ளது. இக்கோவிலில் குங்குமம், வில்வ அர்ச்சனை பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், 200 ஆண்டுகளாக ‘அணையா விளக்கு’ எரிந்து கொண்டுள்ளது.


ஆடை கட்டுப்பாடு; கோவிலினுள் நுழைவதற்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. ஆண்கள் வேட்டி, பேன்ட், சட்டையும்; பெண்கள் சேலையும், ரவிக்கையும் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ‘துாண்களை தொட வேண்டாம்’ எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கோவிலுக்கு செல்வதற்கு அக்டோபர் முதல் பிப்ரவரி வரை சிறந்த மாதங்களாக கருதப்படுகிறது. பிரம்மாண்டமாகவும், பழமை மாறாமலும் காட்சி தரும் இக்கோவிலை பார்ப்பதற்கு பலரும் வருகை தருகின்றனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க கோவிலுக்கு சென்று ஐயன் அருள் பெறலாமா. – நமது நிருபர் –

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar