பதிவு செய்த நாள்
10
மார்
2025
11:03
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி சாலக்கட்லா தெப்போத்சவம் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது. ஸ்ரீ ராம சந்திரமூர்த்தி ஸ்ரீ சீதா லட்சுமண ஆஞ்சநேயருடன் மின்சார விளக்குகள் மற்றும் மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். முன்னதாக, மாலை 6 மணிக்கு, ஸ்ரீ சீதா லட்சுமண ஆஞ்சநேயருடன் ஸ்ரீ ராம சந்திரனின் ஊர்வலம் தொடங்கியது. அது கோயிலின் நான்கு மாட வீதிகள் வழியாக புஷ்கரிணியை அடைந்தது. முதல் நாளில், ஸ்ரீ சீதாராமலக்ஷ்மண ஆஞ்சநேய சுவாமி புஷ்கரிணியில் உள்ள தெப்பத்தில் மூன்று சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திருமலை பெரியஜீயர் சுவாமி, சின்னஜியர் சுவாமி, கூடுதல் அதிகாரி மற்றும்வெங்கையா சவுத்ரி, துணை இஓ லோகநாதம், இஇ-க்கள் சுப்ரமணியம், சுதாகர், டிஇ சந்திரசேகர், கார்டன் துணை இயக்குநர் ஸ்ரீனிவாசலு, விஜிஓ சுரேந்திரா மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.