வேணுகோபால சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2025 03:03
கோவை; கிணத்துக்கடவு அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குரு பவன புரி -ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. விழாவில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பாமா ருக்மணி சமேதராக வேணுகோபால சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.