Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மதுரை இம்மையிலும் நன்மை தருவார் ... சேலியமேடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சேலியமேடு மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் மாசி பங்குனி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் மாசி பங்குனி திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

11 மார்
2025
11:03

காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழா இன்று கொடியேற்றம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.


காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி பால்குடத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு 69 வது மாசி பங்குனி திருவிழா இன்று காலை கணபதி பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டினர். மார்ச் 18 ஆம் தேதி கோயில் கரகம், மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 19 ஆம் தேதி முக்கிய திருவிழாவான காவடி, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். மாலையில் கரகம் பருப்பூரணியில் சேர்க்கும் நிகழ்ச்சியும், இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மார்ச் 20 இரவு அம்மன் திருவீதி உலாவும் 21 ஆம் தேதி சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் விஸ்வநாத், கணக்கர் சரவணன் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar