பதிவு செய்த நாள்
12
மார்
2025
11:03
காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள மாத்தூர் பெரியநாயகி அம்பிகை உடனுறை ஐநூற்றீஸ்வரர் கோயில் மாசிப் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
காரைக்குடி அருகேயுள்ள மாத்தூர் பெரியநாயகி அம்பிகை உடனுறை ஐநூற்றீஸ்வரர் கோயில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த மார்ச் 3 ஆம் தேதி விழா, கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, ரிஷப, அன்ன, சிம்மம், கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை தேருக்கு சாமி எழுந்தருளால் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மாலையில் நடந்தது. இன்று இரவு 8 மணிக்கு சப்தாவரணம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மாத்தூர் நகரத்தார்கள் செய்திருந்தனர். இதில், மாத்தூர், அரியக்குடி, இலுப்பக்குடி, காரைக்குடி உட்பட உட்பட பல்வேறு சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.