சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2025 11:03
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில் தேரோட்டம் நடந்தது.
குன்றக்குடி ஆதீனத்துக்கு உட்பட்ட, இக்கோயிலில் மாசித் திருவிழா மார்ச் 3 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவாக தினமும் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 8:30 மணிக்கு சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். உமாபதி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தி வைத்தார். மாலை 5:00 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தேரோட்டத்தை துவக்கி வைத்தார். நான்கு ரதவீதிகளில் தேரை வடம் பிடித்து கிராமத்தினர் இழுத்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 6:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.