Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமூக சேவைக்கு பிரசித்தி பெற்ற ஷரவு ...
முதல் பக்கம் » துளிகள்
சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர்
எழுத்தின் அளவு:
சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர்

பதிவு செய்த நாள்

12 மார்
2025
01:03

பூங்கா நகர் பெங்களூரில், புராதன கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. பல்வேறு கோவில்கள் பக்தர்களை பரவசத்துடன் ஈர்க்கின்றன. இவற்றில் வி.வி.புரம் சனீஸ்வரர் கோவிலும் ஒன்று. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். பெங்களூரில் வரலாற்று புகழ் மிக்க பல இடங்கள் உள்ளன. ஒவ்வொரு இடத்துக்கும் தனி மகத்துவம் உள்ளது. பசவனகுடி என்றால் கடலைக்காய் திருவிழா, தொட்ட கணபதி கோவில், தொட்ட பசவண்ணர் கோவில் நினைவுக்கு வரும். ஹலசூரு என்றால் பழமையான சோமேஸ்வரர் கோவில், பனசங்கரி என்றால் பனசங்கரி கோவில் நினைவுக்கு வரும்.


அதேபோன்று காந்தி பஜார் அருகில் சஜ்ஜன்ராவ் சதுக்கத்தில் உள்ள வி.வி.புரம் என்றால் ‘புட் ஸ்ட்ரீட்’ நினைவுக்கு வரும். இங்கு கிடைக்காத உணவு ரகங்களே இல்லை. இது உணவு பிரியர்களுக்கு பிடித்தமான இடமாகும். இதே பகுதியில் சக்திவாய்ந்த சனீஸ்வரர் கோவில் உள்ளது பலருக்கும் தெரியாது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வாழ்க்கையில் வாட்டி வதைக்கும் கஷ்டங்களில் அவதிப்படுவோர், இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து, வேண்டிக் கொண்டால் கஷ்டங்கள் பஞ்சாய் பறந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பயபக்தியுடன் வணங்கி, நெய்வேத்தியம் செய்து, விளக்கேற்றி வழிபடுவர். சனீஸ்வரர் கோவிலுக்குள் வீர பத்ரேஸ்வரர் கோவில், சாய்பாபா கோவில், கிருஷ்ணர் கோவில் உட்பட பல்வேறு சன்னிதிகள் உள்ளன. ஒரு முறை சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைந்தால், பல கடவுள்களை தரிசித்துவிட்டு, மன நிறைவோடு திரும்பலாம். நிதானமாக ஒவ்வொரு கோவிலாக தரிசனம் செய்தபடி சென்றால், மனது லேசாகி அமைதி அடையும். சனீஸ்வரர் கோவில் அருகிலேயே, அழகான பூங்கா உள்ளது. குடும்பத்துடன் வந்தால் கோவிலை தரிசனம் செய்துவிட்டு, பூங்காவில் சிறிது நேரம் பொழுது போக்கிவிட்டுச் செல்லலாம்.


எப்படி செல்வது? பிரபலமான பகுதியில் உள்ளதால், அனைத்து பகுதிகளில் இருந்தும் அரசு பஸ் வசதி உள்ளது. வாடகைக் கார், ஆட்டோவிலும் செல்லலாம். அது மட்டுமின்றி மெட்ரோ ரயில் வசதியும் உள்ளது. கே.ஆர்.புரம் மெட்ரோ ரயில் நிலையம் அருகிலேயே, சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு இறங்கி நடந்தே கோவிலை சென்றடையலாம். 


கோவில் நேரம்: காலை 6:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை,@@subboxhd@@தொலைபேசி: 89701 88115. – நமது நிருபர் –

 
மேலும் துளிகள் »
temple news
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் ஏராளமான பழங்கால, புராண வரலாறுகள் கொண்ட கோவில்கள் ... மேலும்
 
temple news
மக்கள் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் நிலையில், மன அழுத்தத்தில் இருந்து மக்களை விடுபட வைக்கும் ஒரு ... மேலும்
 
temple news
பெங்களூரு, கே.ஆர்., புரம் மார்க்கெட் அருகில் உள்ளது மலை கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமணா கோவில். பெங்களூரு ... மேலும்
 
temple news
தமிழகம் போன்று கர்நாடகாவிலும் அதிகளவில் கோவில்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷம். ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar