ராயம்பாளையம் காட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2025 08:03
அவிநாசி; ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர். ராயம்பாளையம் ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவிற்கு, கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதல்,கம்பம் நடுதல் நடைபெற்றது. பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு நேற்று அம்மன் அழைத்தல்,மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் மகா அபிஷேக பூஜைகள், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்,கரகம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று மஞ்சள் நீர் விழாவுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது. ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில் விழா குழுவினர் சார்பில் பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.