பதிவு செய்த நாள்
18
மார்
2025
10:03
அன்னுார்; காரேகவுண்டன்பாளையம், கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காரே கவுண்டன் பாளையத்தில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் புதிதாக மூலஸ்தானம், விமானம், மகா மண்டபம், சுற்றுச்சுவர் ஆகியவை கட்டப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி செய்யப்பட்டது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த 14ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில் பூமாதேவி வழிபாடு நடந்தது. 15ம் தேதி காலையில் கோவில்களில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதலும், வேத பாராயணமும், மாலையில் முதற்கால வேள்வி பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து விமான கோபுரத்திற்கும், மூலஸ்தான கற்பக விநாயகருக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தச தரிசனம், மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.