தாடிக்கொம்பு: சபரிமலை ஐயப்பன் கோயில் சிறப்பு தரிசனத்திற்கான இணையதள முன்பதிவு, டிச.26 வரை முடிந்துள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன், மகரஜோதி தரிசனத்தின் போது, கூட்ட நெரிசலால் பலர் இறந்தனர். இதையடுத்து, கடந்தாண்டு முதல், இணையதளத்தில் சிறப்பு தரிசன இலவச முன்பதிவை கேரள போலீஸ் துவக்கியது. தினமும் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பதிய வாய்ப்புள்ளது. பக்தர்கள், பாஸ்போர்ட் போட்டோ, வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், முன்பதிவு செய்யலாம். தரிசன தேதி, குறிப்பிட்ட நேரத்திற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. டிச.26 வரை முன்பதிவு முடிந்துள்ளது.