சுக்கிரவார விரதம்; முருகனை வழிபட்டால் வெற்றி, இழந்த செல்வம் யாவும் கிடைக்கும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2025 01:03
வெள்ளிக்கிழமை விரதம் அம்பிகை, லட்சுமி, முருகன் ஆகியோருக்கு உரியது. இதனை மேற்கொண்டால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைக்கும். சுகபோக வாழ்வு உண்டாகும். வாகனயோகம் அமையும்.
புராண காலத்தில் பகீரதன் என்னும் மன்னன், கோரன் என்னும் அசுரனிடம் நாட்டை இழந்தான். அசுர குருவான சுக்கிராச்சாரியாரிடம் சரணடைந்த பகீரதன் நாட்டை மீட்க வழி கேட்டான். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து வெள்ளிக்கிழமை விரதமிருந்து, முருகனை வழிபட்டால் வெற்றி கிடைக்கும், என்றார் சுக்கிராச்சாரியார். அதன்படி முருகனைக் குறித்து வெள்ளிக்கிழமையில் சுக்கிரவார விரதம் இருக்கத் தொடங்கினான். முருகப்பெருமான், கோரனை அழித்து, பகீரதனுக்கு மீண்டும் அரசாட்சியை அளித்தார். தேனூர் வரகவி சொக்கலிங்கனார் இயற்றிய சேய்த்தொண்டர் புராணத்தில் இந்த வரலாறு உள்ளது. வெள்ளிக்கிழமை விரதமிருந்தால் முருகன் அருளால் வெற்றி, இழந்த செல்வம் கிடைக்கும். எதிரிபயம் நீங்கும்.