பேரூர் அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2025 03:03
அவிநாசி; பேரூர் அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை கலையரங்கத்தில் நடைபெற்றது.
பேரூர் அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 75 வது திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள கருணாம்பிகை கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் கோவை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,கோவை, அவிநாசி திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு திருவாசகம் படித்தனர். திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார், அறங்காவலர் பொன்னுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை, திருக்கோவில் பக்தர்கள் பொதுநல சங்கம் மற்றும் பேரூராதினம் திருவாசகம் முற்றோதல் குழு ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.