ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் யானை "பவானி யின் ஆத்மா சாந்தியடைய சிறப்பு பூஜை துவங்கியது. நவ. 25ல், புத்துணர்வு முகாமிற்கு அழைத்து சென்ற, யானை உடல் நலக்குறைவால் இறந்தது. மறுநாள், ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமான பசுபட்டியில் அடக்கம் செய்யப்பட்டது. இதன் ஆத்மா சாந்தியடையவும், கோயில் சுபிட்சம் பெறவும், யானை கட்டும் மண்டபத்தில் குருக்கள் உதயக்குமார் தலைமையில் சிறப்பு ஹோமம் நடந்தது. இன்று, சேதுமாதவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன. இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், மேலாளர் சுக்காரின் பங்கேற்றனர்.