பெண் வேடமணிந்து ஆண்கள் வழிபாடு; பெண்களே பொறாமை படும்படி அசத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2025 02:03
நாகர்கோவில், வாழ்க்கையில் வளம் பெற பெண் வேடமணிந்து வந்த ஆண்கள் தேவியிடம் மனம் உருகி பிரார்த்தனை நடத்தினர். கேரள மாநிலம் கொல்லம் அருகே கொட்டாங்குளங்கரை தேவி கோயிலில் சமயவிளக்கு திருவிழா பிரசித்தி பெற்றது. திருவிழா என்றால் பெண்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். ஆனால் இங்கு ஆண்டுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கலந்து கொள்வார்கள். அசல் பெண்கள் போல வேடமணிந்து வரும் ஆண்கள் இங்குள்ள ஒப்பனை விளக்கில் ஐந்து திரிகள் ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டால் அவரது வாழ்க்கையில் செல்வம் பெருகி வேலை கிடைத்து எல்லா ஐஸ்வரிங்களும் கிடைக்கும் என்பது ஆண்கள் நம்பிக்கை. ஆண்களை பெண்களாக மாற்ற ஏராளமான ஒப்பனை கலைஞர்களும் இங்கு கூடுகின்றனர். பெண்களே பொறாமை படும் அளவு ஆண்டுகள் மேக்அப் போட்டு வந்து அனைவரையும் கவர்ந்து விடுவர். சிறப்பாக வேடமணிந்து வருபவருக்கு பரிசும் வழங்கப்படுகிறது. இதை காண இங்கு திரளான பக்தர்கள் கூடுகின்றனர். அதன்படி நடைபெற்ற கோட்டம் குளக்கரை பகவதி அம்மன் கோவில் சமய விளக்குத் திருவிழாவில் ஆண்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.