பழநி துர்நாச்சி அம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2025 04:03
பழநி; பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துர்நாச்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழநி சண்முக நதி அருகே பைபாஸ் சாலையில் உள்ள கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துர்நாச்சி அம்மன் கோயில் உள்ளது. கடந்த சில மாதங்களாக கோயில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முகூர்த்தகாலுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.