Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ... காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் நாளை தேரோட்டம் காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் அன்னமாச்சார்யா 522 வது பிறந்த நாள் உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருமலையில் அன்னமாச்சார்யா 522 வது பிறந்த நாள் உற்சவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

27 மார்
2025
10:03

திருப்பதி; அன்னமாச்சார்யா இசை மேதை, ஏழுமலையான் பக்தர். தென்னிந்திய இசையில் ஏராளமான மரபுகளைத் தோற்றுவித்தவர்,32,000 கீர்த்தனைகளை இயற்றியவர். சமஸ்கிருதத்தில் ‘சங்கீர்த்த லட்சணம்’, ‘வெங்கடாசலபதி மஹிமா’ ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். தெலுங்கில் 12 சதகங்களை (ஒரு சதகம் 100 பாடல்கள் கொண்டது) படைத்துள்ளார். இதில் ‘வெங்கடேஸ்வர சதகம்’ என்ற நூல் மட்டும் கிடைத்துள்ளது. இவர் படைத்த ‘த்விபர்த ராமாயணா’, ‘ஸ்ருங்கார மஞ்சரி’ ஆகியவை தெலுங்கு இலக்கியத்தில் முக்கிய நூல்களாகப் போற்றப்படுகின்றன. தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரும் பிரபலமான ‘சுபத்ரா கல்யாணம்’ என்ற நூலை எழுதியவருமான திம்மக்கா இவரது மனைவி. இவர்களது மகன் திருமாலாச்சாரியார், பேரன் சின்னய்யா ஆகியோரும்கூட, தென்னிந்திய சங்கீத வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர்கள். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘அன்னமய்யா’ என்ற தெலுங்கு திரைப்படம் 1997-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. பல தெலுங்கு திரைப்படங்களில் இவரது பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  தென்னிந்திய சங்கீத பாரம்பரியத்தின் முக்கிய சின்னமாகப் போற்றப்படுபவரும், கவிஞர், அறிஞர், ஆச்சார்யா, அன்னமய்யா என்றெல்லாம் போற்றப்படுபவருமான அன்னமாச்சார்யா 95-வது வயதில் (1503) மறைந்தார். 


அவரது 522 வது பிறந்த நாள்  திருப்பதியில் உள்ள அலிபிரி பாத மண்டபத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. காலை 6 மணி முதல் அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்கள் மற்றும் பஜனை மண்டல கலைஞர்கள் அன்னமாச்சாரியாரின் "சப்தகிரி சங்கீர்த்தன கோஸ்திகானம்" நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின், மெட்லபூஜை நடைபெற்றது. மாலை திருமலையில் உள்ள நாராயணகிரி உத்யானவனத்தில் ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் ஏற்பாடு செய்த சப்தகிரி சங்கீர்த்தனங்களால் சப்தகிரிவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அஹோபில மடத்தின் 46வது பீடாதிபதி ஸ்ரீமன் ஸ்ரீவன் சதகோப ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிஜி, ஆசி வழங்கி உரை நிகழ்த்தினார்.  இந்நிகழ்ச்சியில், TTD கூடுதல் EO ஸ்ரீ சி.எச். வெங்கையா சவுத்ரி சுவாமிக்கு ஸ்ரீவாரி பிரசாதம் வழங்கினார். முன்னதாக, துவாதசி மற்றும் சப்தகிரி சங்கீர்த்தன குழு பாடலின் ஒரு பகுதியாக, கலைஞர்கள் “துவாதசி நீடு..., பாவமுலோனா போன்ற பாடல்களை பாடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பகவான் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் உகாதி பண்டிகையையொட்டி டிடிடி தோட்டக்கலைத் துறையால் ... மேலும்
 
temple news
உடுமலை; யுகாதி பண்டிகையையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் ரேணுகா தேவி அம்மன் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு யுகாதி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar