உங்கள் ராசிக்கு சுக்கிரன், புதன், கேது அனுகூல பலன்களை அள்ளி வழங்குவர். மனதில் குறுக்கிடும் எதிர்மறை விஷயங்களை தவிர்ப்பதால் நிம்மதியை தக்கவைக்க இயலும். பணவரவு அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்பு உருவாகும்.புத்திரர் படிப்பில் சிறந்து விளங்குவர். திறமையை வெளிப்படுத்தி பாராட்டு, பரிசு பெறுவதைக் கண்டு பெருமிதம் காண்பீர்கள். பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானம் அதிகரிக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகைகளை தவிர்ப்பதால் ஆரோக்கியம் நிலைக்கும். கடனில் ஓரளவு அடைபட வாய்ப்புண்டு. தம்பதியர் ஒருவருக் கொருவர் புரிதல் தன்மையுடன் நடந்து கொள்வர். ஒற்றுமையால் குடும்பவாழ்வை இனிதாக்குவர். தொழிலதிபர்கள் நிர்ணயித்த உற்பத்தி இலக்கை அடைய ஆர்வத்துடன் செயல்படுவர். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். தொழிற்சாலை நிறுவன பாதுகாப்பு நடைமுறைகளை சரியாகப் பின்பற்றுவது நல்லது. வியாபாரிகள் அளவான கொள்முதல் செய்து விற்பனையைச் சீராக வைத்திருப்பர். சரக்கு பரிவர்த்தனையில் விழிப்புடன் இருப்பது அவசியம். பணியாளர்கள் திறமையுடன் செயலாற்றி பணி இலக்கு எளிதில் பூர்த்தி செய்வர். சகபணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் பேச்சுக்கு மதிப்பளிப்பர். குடும்ப செலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். பணிபுரியும் பெண்கள் திறம்பட செயலாற்றி பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். சலுகைப்பயனும் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் உற்பத்தி, விற்பனை இலக்கை நிறைவேற்றுவர். எதிர்பார்த்த பணவரவுடன் நிலுவைப்பணமும் வசூலாகும். அரசியல்வாதிகள் மக்களுக்குப் பயனுள்ள புதிய திட்டங்களை உருவாக்குவர். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். விவசாயிகள் வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் குறுக்கிட்ட தடைகளை முறியடித்து வியத்தகு வளர்ச்சி காண்பர். பெற்றோரின் அன்புக்கு உரியவராகத் திகழ்வர்.
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் சிரமம் குறைந்து நன்மைகள் மேலோங்கும். உஷார் நாள்: 9.12.12 பிற்பகல் 1.26 முதல் 11.12.12 மாலை 4.17 வரை வெற்றி நாள்: நவம்பர் 28, 29 நிறம்: சந்தனம்,ரோஸ் எண்: 1, 6
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »