பதிவு செய்த நாள்
31
மார்
2025
12:03
காளஹஸ்தி; தெலுங்கு ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் உகாதி (விஸ்வாவஸு நாம ஆண்டு ) கொண்டாட்டங்கள், ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றன. விஸ்வாவஸு நாம வருடத்தை முன்னிட்டு காளஹஸ்தி சிவன் கோயில் சிறப்பாக பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படட்டிருந்தன. கோயில் மின் விளக்குகளால் ஜொலித்தன. கோயில் வளாகத்தில் அனைத்து பார்த்தாலும், மின் விளக்குகளின் ஒளியின் மத்தியில் வண்ணமயமான மலர்களால் கோயில் வளாகம் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தெலுங்கு புத்தாண்டு உகாதியையொட்டி, காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரின் மூலவர் சன்னதி மற்றம் துணை சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பக்தர்கள் அதிகாலை முதலே கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு உகாதி பச்சடியை பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர், மாலை 4 மணிக்கு, (தெலுங்கு) புத்தாண்டின் பஞ்சாங்கம் ஷ்ரவணம் நடைபெற்றன. தொடர்ந்து சாமி அம்மையார்கள் நகரில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வேத பண்டிதர் மாருதி சர்மா சுவாமிகள் கூறியதாவது; ஒவ்வொரு தெலுங்கு வருடத்திற்கும் ஒரு பெயர் உண்டு. இந்த புத்தாண்டின் பெயர் விஸ்வவசு நாம ஆண்டு ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 30, 2025 அன்று தொடங்கி உள்ளது. இந்த புத்தாண்டடு பிரபஞ்சத்துடன் தொடர்புடையது. இந்த காலகட்டத்தில் போதுமான வருமானம் பெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. இந்த புத்தாண்டில் பலர் நல்ல பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு நல்ல பலனைத் தரும் என்றும் கூறினர்.