பதிவு செய்த நாள்
01
ஏப்
2025
01:04
மதுரை; முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதமாகும். முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகிறது. கார்த்திகையான இன்று ஆறுமுகனை வழிபட கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி நிலைக்கும். முருகா என்று அழைத்து வழிபட்டாலும் போதும் எல்லா நன்மையும் நடக்கும்.
மும்மூர்த்திகளையும், தாயார்களையும் உள்ளடக்கியது முருகா என்ற நாமம். முருகனை அழைத்து வழிபடும் போது, அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதாக அர்த்தம். முருகனை நினைத்தால், வேலும், மயிலும் வந்து வேண்டியதை செய்துவிடும். அறிவுக்கான அடையாளமே முருகனின் வெற்றி வேல். வேலாயுதத்தை போல், ஆழ்ந்த, அகலமான, கூர்மையான அறிவு இருக்க வேண்டும். முருகபக்தர் வாடும் போதெல்லாம், வேல் வந்து வழிகாட்டும்; மயில்வந்து துணை நிற்கும். இன்று சண்முக கவசம், கந்தர் அனுபூதி போன்ற பாடல்களை பாடி, இறைவனை வழிபட வேண்டும். மனதார நினைத்து, எந்த தெய்வத்தை வேண்டினாலும், கந்தசாமி வீட்டிற்கே நேரில் வந்து அருள்பாலிப்பார்.