Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ... பங்குனி உத்திர திருவிழா, சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை திறப்பு பங்குனி உத்திர திருவிழா, சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் தூக்க திருவிழா; 1175 குழந்தைகளுக்கு தூக்க நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் தூக்க திருவிழா; 1175 குழந்தைகளுக்கு தூக்க நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

01 ஏப்
2025
05:04

நாகர்கோவில்; கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் இன்று 1175 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி - கேரள எல்லையான கொல்லங்கோட்டில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோயில். இங்கு நடைபெறும் தூக்கத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. குழந்தை வரம் வேண்டியும் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வாழ வேண்டியும், இந்த நேர்த்திக்கடன் இங்கு நடத்தப்படுகிறது. 45 அடி உயரம் கொண்ட இரண்டு தூக்க மரத்தின் மேல் முனையில் கட்டப்பட்டுள்ள நான்கு தூக்கவில்லில் குழந்தைகளை ஏந்தி செல்லும் தூக்க காரர்கள் துணிகளால் இடுப்பில் கட்டப்படுவர். பின்னர் இவர்களின் கையில் நேர்ச்சை குழந்தைகள் கொடுக்கப்படுவார்கள். இதைத்தொடர்ந்து தூக்க மரம் 20 அடி உயரத்தில் எழும்பிய பின்னர் தேர் போன்ற தூக்க வண்டியை பக்தர்கள் இழுத்து கோயிலை ஒருமுறை வலம் வரும்போது நான்கு குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நிறைவேறும். இந்த ஆண்டு1175 குழந்தைகள் முன்பதிவு செய்து இருந்தனர். இதற்காக 294 முறை இந்த தூக்க வேண்டி கோயிலை வலம் வந்தது. குழந்தைகளை இரண்டு கைகளிலும் தாங்கிய படி தொங்குகின்ற தூக்கக்காரர்கள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே தேர்வு செய்யப்படுகின்றனர்.


இன்று காலை 6:30 மணி முதல் தூக்க வண்டி ஓடத் தொடங்கியது. நாளை அதிகாலை வரை தூக்கவேண்டி கோயிலை வலம் வந்து தூக்க நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படும். தூக்கத் திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதியில் இருந்து கொல்லங்கோட்டுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தூக்கம் நிறைவு பெற்றதும் ஆராட்டுடன் விழா நாளை நிறைவு பெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 
temple news
நெய்வேலி; சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar