உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் பக்தர் ஏற்பாட்டில் அணையா விளக்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2025 12:04
தஞ்சை; தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் கோவில் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது, இக்கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து கோயிலின் கட்டிடக்கலையை கண்டு வியந்து ரசித்தும் மஹா நந்தியம்பெருமான், மற்றும் பெருவுடையாரை வணங்கியும் செல்கின்றனர், இந்நிலையில் தஞ்சை பெரிய கோயில் கொடிமரம் முன்பு பக்தர் ஒருவர் ஏற்பாட்டின் பேரில் அணையா விளக்கு வைக்கப்பட்டுள்ளது, பக்தர்கள் ஆங்காங்கே விளக்கு ஏற்றி வைத்து எண்ணெய் படலமாக காணப்பட்ட நிலையில் இந்த அணையா விளக்கு தற்போது வைக்கப்பட்டுள்ளது, பக்தர்கள் இந்த அணையா விளக்கில் எண்ணெய் ஊற்றுவதால் தீபம் தொடர்ந்து எரிகிறது, இதனை வேலூரை சேர்ந்த பக்தர் ஒருவர் உபயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.