பதிவு செய்த நாள்
10
டிச
2012
03:12
மற்றவர் கருத்துக்கும் மதிப்பளிக்கும் மீனராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு நற்பலன் தரும் கிரகங்களாக சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் செயல்படுகின்றனர். மனதிலும் செயலிலும் புத்துணர்வு அதிகரிக்கும். ஆன்மிக நம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். உங்கள் முயற்சி அத்தனையும் சிறந்து தாராள நற்பலனை பெற்றுத்தரும். தம்பி, தங்கை வகையில் மங்கல நிகழ்வுக்கான பேச்சுவார்த்தை திருப்திகரமாகும். வீடு, வாகனத்தில் தேவையான அபிவிருத்தி மாற்றம்
செய்வீர்கள். புத்திரர்கள் ஆரோக்கிய உடல்நலம் பெற்று படிப்பு, திறமை வளர்ப்பில் சிறந்து விளங்குவர். சொத்து சேர்க்கை பெற அனுகூல வாய்ப்பு உருவாகும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். தம்பதியர் குடும்பத்தின் எதிர்கால நலன் சிறக்க தேவையான பணிகளை ஒற்றுமையுடன் மேற்கொள்வர். தொழிலதிபர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பினால் உற்பத்தி இலக்கு எளிதில் நிறைவேறும். அரசு தொடர்பான உதவி எதிர்பார்த்த வகையில் திருப்திகரமாக கிடைக்கும். வியாபாரிகள் சந்தையில் கூடுதல் வரவேற்பு கிடைத்து விற்பனையில் முன்னேற்றம் காண்பர். பணியாளர்கள் குறித்த காலத்தில் வேலைகளை முடிப்பர். சலுகைகள் பெறுவதில் இருந்த தாமதம் விலகும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, தாராள பணவசதி கிடைத்து மகிழ்ச்சியான வாழ்வு நடத்துவர். பணிபுரியும் பெண்கள் லட்சிய மனதுடன் செயல்பட்டு பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு கணவர்,தோழியின் உதவியால் புதிய ஆர்டர் கிடைக்கும். உற்பத்தி, விற்பனை அதிகரித்து உபரி பணவரவு வந்து சேரும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்து திட்டங்களை நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். மாணவர்கள் ஆர்வமுடன் படித்து உயர்ந்த தேர்ச்சிவிகிதம் பெறுவர்.
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் வாழ்வில் நன்மை அதிகரிக்கும்.
உஷார் நாள்: 5.1.13 இரவு 9.24 முதல் 7.1.13
நள்ளிரவு 12.24 வரை
வெற்றி நாள்: டிசம்பர் 26, 27
நிறம்: ஊதா, ஆரஞ்ச் எண்: 1, 8.