உங்கள் ராசிக்கு கேது மூன்றிலும் சூரியன், புதன் ஆதாய ஸ்தானத்திலும் அமர்ந்து வாழ்வில் வளம் பெற தேவையான பலன் வழங்குகின்றனர். மனதில் இருந்த தயக்கம் விலகி பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீடு, வாகன வகையில் தற்போதைய வசதி தொடர்ந்து கிடைக்கும். தாயின் மனம் சஞ்சலப்படாத வகையில் நடந்து கொள்வது நல்லது. புத்திரர்கள் தகுதி, திறமை வளர்த்து படிப்பில் தேர்ச்சியும் வேலை வாய்ப்பில் முன்னுரிமையும் பெறுவர். அவர்கள் விரும்பிய பொருட்களை வாங்கித்தருவீர்கள். உடல்நலம் பலம்பெறும். விவகாரங்களில் அனுகூலத்தீர்வு கிடைக்கும். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறையுடன் செயல்படுவர். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவுவது, உதவி பெறுவதுமான நன்னிலை உருவாகும். தந்தையுடன் பயணம் செல்வதை தவிர்ப்பது நல்லது. சூரியன், புதன் சேர்க்கை புத ஆதித்ய யோக பலன்களை பெற்றுத்தரும்.தொழிலதிபர்கள் புதிய தொழில் கருவிகளை வாங்கி உற்பத்தியின் அளவு, தரம் உயர்த்துவர். பணவரவு திருப்திகரமாகும். வியாபாரிகள் அன்பான அணுகுமுறையால் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவர். விற்பனை அதிகரித்து திருப்திகரமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகை பெறுவர். குடும்பப் பெண்கள் கணவரின் அனுமதி இன்றி, உறவினர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். வீட்டுச்செலவுக்கு போதுமான பணம் இருக்கும். பணிபுரியும் பெண்கள் கவனத்துடன் செயல்படுவதால் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். சலுகைகள் ஓரளவு கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் பொருள் உற்பத்தியில் குறைகளை சரி செய்ய வேண்டி வரும். அரசியல்வாதிகள் எதிர்ப்பாளர்களைப் பலமிழக்கச் செய்வர். விவசாயிகளுக்கு அளவானமகசூல் கிடைக்கும். கால்நடைகளுக்கு மருத்துவச் செலவு உண்டு. மாணவர்கள் சுமாராகப் படிப்பர்.
பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உஷார் நாள்: 3.1.13 மாலை 4.57 முதல் 5.1.13 இரவு 9.24 வரை வெற்றி நாள்: டிசம்பர் 22, 23 நிறம்: பச்சை, சிமென்ட் எண்: 4, 5
மேலும்
ஆடி ராசி பலன் (17.7.2025 முதல் 16.8.2025 வரை) »