பணம் நல்ல செயல்கள் செய்து புகழ்பெறும் மேஷராசி அன்பர்களே! (தை மாத பலன்)
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆதாய ஸ்தானத்தில் அனுகூலமாக அமர்வு பெற்றுள்ளார். சூரியன், குரு தாராள நற்பலன்களை வழங்குகின் றனர். மனதில் இருந்த முரண்பட்ட எண்ணங்களை அகற்றி நற்சிந்தனைகளுடன் செயல்படுவீர்கள். திட்டங்களை நிறைவேற்ற பணம் பாலாய் பொங்கும். இளைய சகோதர வகையில் ”ப விஷயம் பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும். புத்திரர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். எதிரிகளின் செயல்களாலும் மறைமுக அனுகூலம் பெறுவீர்கள். உடல்நலம் சிறப்பாக அமையும். தம்பதியர் மாத முற்பகுதியில் இணக்கமான சிந்தனையுடன் செயல்பட்டு குடும்ப வாழ்வை சந்தோஷமாக நடத்துவர். பிற்பகுதியில் ஒருவருக்கொருவர் தேவையற்ற வகையில் பேசுவதால் சிறு அளவிலான சச்சரவு உருவாகி பின்னர் சரியாகும். நண்பர்களுக்கு உதவுவதிலும் அவர்களிடம் உதவி பெறுவதிலும் நிதான அணுகுமுறை நல்லது. தொழிலதிபர்கள் அரசு தொடர்பான அனுகூலம் பெறுவர். உற்பத்தி அதிகரித்து லாபம் கூடும். வியாபாரிகள் அதிக விற்பனையும் தாராள பணவரவும் காண்பர். பணியாளர்கள் வேலைகளை வேகமாக முடிப்பர். குடும்பப் பெண்கள் கணவரின் பணிகள் சிறக்க தேவையான ஆலோசனை, உதவி வழங்குவர். பணிபுரியும் பெண்களுக்கு பணியிடத்தில் சுமூக சூழ்நிலை அமையும். குறித்த காலத்தில் வேலைகளைச் செய்து அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் அபிவிருத்தி பணிகளைச் செய்வர். உற்பத்தி, விற்பனை செழித்து உபரி பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பிலும் திருப்திகரமான முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் உற்சாகத்துடன் படித்து உயர்ந்த தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்:தனலட்சுமியை வழிபடுவதால் தொழில் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும். உஷார் நாள்: 4.2.13 காலை 8.29 - 6.2.13 காலை 10.53. வெற்றி நாள்: ஜனவரி 24, 25 நிறம்: ஆரஞ்ச், வெள்ளை எண்: 6, 7
மேலும்
ஆடி ராசி பலன் (17.7.2025 முதல் 16.8.2025 வரை) »