அதிகார நந்தி வாகனத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் வீதி உலா; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2025 12:04
சென்னை; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா, விடையாற்றி கலை விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவில் இன்று காலை அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார். நான்கு மாட வீதிகளிலும் கம்பீரமாக ஆடி அசைந்து, அதிகார நந்தி வாகனத்தில் வந்த கபாலீஸ்வரரை பக்தர்கள் கபாலி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். ஏப்ரல் 9ம் தேதி தேரோட்டமும், ஏப்ரல் 10ல் அறுபத்து மூவர் வீதியுலாவும் நடைபெறும்.